மீன் வரத்து அதிகம்

X
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு மீன்பிடி தடை காலத்தில் 9 டன் கடல் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வரத்து குறைவு எதிரொலியாக மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் இன்று மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து 18 டன் கடல் மீன்கள் இன்று ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:- கடல் கொடுவா - 850, வெள்ளை வாவல் - 1, 200, கருப்பு வாவல் - 900, வஞ்சரம் - 1000, சால்மோன் - 850, முரல் - 400, மயில் - 700, கிளி - 700, சங்கரா - 400, விளமின் - 600, தேங்காய் பாறை - 600, பெரிய இறால் - 750, சின்ன இறால் - 600, ப்ளூ நண்டு - 700, அயிலை - 300, மத்தி - 300, டுயானா - 700, திருக்கை - 450, வசந்தி - 500, கனவா - 400.வார கடைசி நாள் என்பதால் இன்று வழக்கத்துடன் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
Next Story

