வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில்ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அரேபாளையம் சிவசாமி (50) இவர் 10 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் 1 மணியளவில் மாடுகள் மிரண்டு ஒடின. மேய்ச்சலுக்கு விட்டிருந்த விவசாயி பார்த்தபோது தனது ஒரு மாட்டை சிறுத்தை கடித்து கொண்டிருந்தது. சத்தம் போடவே சிறுத்தை மாட்டை விட்டுவிட்டு வனப்பகுதிகுள் ஓடியது. சிறுத்தை கடித்து மாடு படுகாயம் அடைந்தது.இது பற்றி ஆசனூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அரேபாளையம் ஒங்கல்வாடி கிராமத்தை சேர்ந்த 30- க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆசனூர் வனச்சரக அலுவலத்தை முற்றுகையிட்டனர்.இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த 1 மாதத்தில் மட்டும் அரேபாளையம் ,ஒங்கல்வாடி கிராமத்தில் 4 மாடுகள் 10 கோழிகள், 1 எருமை என சிறுத்தை கடித்து கால்நடைகள் பலியாகி உள்ளது.ஊருக்குள் புகுந்து தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க படவில்லை என குற்றம் சாட்டினர்.அப்போது ஆசனூர் வனச்சரகர் பாண்டியராஜன் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.இதை ஏற்று கொண்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story

