கலவை தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க கோரிக்கை!

X
கலவை தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானம், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றிற்கு இசேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு பல மாதங்களாக சான்றிதழ்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் சேர சாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் தேவைப்படுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மாவட்ட வருவாய் அலுவலர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி போர்க்கால அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

