கோவை: தமிழகத்தில் கட்டாய கல்வி அவசியம் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

X
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டுக்காக தமிழகம் சார்ந்த கட்சியே தலைமை வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார். திருமண விழா மற்றும் கட்சி ஆலோசனை கோவையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளதாகவும், கட்சி நிர்வாக ஆலோசனைக் கூட்டமும் கோவையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் கிருஷ்ணகிரியில விவசாயிகளுக்காக நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் செல்வதாக கூறினார். கட்டாய கல்வி குறித்து கருத்து அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பது தே.மு.தி.க-வின் உறுதியான நோக்கமாகும். கல்வியின்றி எதிர்காலம் இல்லையெனவும், தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதே கட்சியின் விருப்பம் எனக் கூறினார். சுதீஷ் நிகழ்ச்சி பங்கேற்பு – அரசியல் தொடர்பு இல்லை சுதீஷ் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அரசியல் தொடர்பு இல்லை என்றும், இது நீண்ட நாள் நட்பின் வெளிப்பாடாகும் எனவும் விளக்கினார். தேர்தல் முன்னேற்பாடுகள் தமிழகத்தில் எட்டு மண்டலங்களாக பிரித்து மாவட்ட, தொகுதி, பூத் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். கூட்டணி தலைமை பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு கட்சியே வகிக்க வேண்டும் எனக் கூறினார். மக்கள் நலனுக்காக எந்தக் கட்சி வந்தாலும் வரவேற்கப்படும் என்றும் குறிப்பிட்டார். போதை பிரச்சனை நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சம்பவம் தொடர்பாக, அவர்கள் மட்டுமல்லாமல் தமிழகமே போதை பிரச்சனையில் சிக்கியுள்ளது. இது யாராலும் மறுக்க முடியாது. அரசு ஒரு போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் எனக் கூறினார். தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் கோவையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன, மேம்பாலங்கள், சாக்கடை திட்டங்கள் நிறைவேறவில்லை. கோயம்புத்தூர் கிளீன் சிட்டி என்ற பெயரைக் கூட இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். அரசு இதற்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். விஜய் குறித்து தனது வயதைக் கொண்டு நடிகர் விஜய்க்கு அறிவுரை கூற இயலாது. அவர் தானாகவே முடிவெடுக்கக்கூடியவர் எனக் கூறினார். மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Next Story

