தக்கோலத்தில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

தக்கோலம் கீழ்பஜார் பகுதியை சேர்ந்த அரி என்பவர் வீட்டிலேயே குடிசை தொழிலாக சிறிய அளவில் கோலி சோடா தயாரித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை எதிர்பாராத விதமாக கோலி சோடா தயாரிக்க பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை சிமெண்டு சீட்டுகள் நொறுங்கி விழுந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் சிதறியது. இதில் அரியின் தாயார் பூலோகம்மாள் (வயது 70) மற்றும் உறவினரான 11-ம் வகுப்பு படிக்கும் அஸ்வதா என்ற சிறுமியும் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தக்கோலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 2 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய பாதுகாப்பு வசதி மற்றும் அரசு வழிகாட்டல்கள் இல்லாமல் சோடா தயாரித்ததாக அரியை கைது செய்தனர்.
Next Story

