ராமநாதபுரம் புதிய வாக்காளர்கள் சிறப்பு

ராமநாதபுரம் புதிய வாக்காளர்கள் சிறப்பு
X
ஓரணியில் தமிழ்நாடு முதுகுளத்தூரில் புதிய வாக்காளர் சேர்க்கை குறித்த கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் தமிழக முதல்வர் வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2 கோடி புதிய வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திமுக ஒன்றிய நகர மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜென்ட்கள் ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்து கூட்டம் நடத்தப்பட்டது. முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனம் மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சருமான திரு ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் ஏற்பாட்டில், முதுகுளத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த புதிய வாக்காளர் சேர்க்கை முகாமில் கமுதி, முதுகுளத்தூர் கடலாடி பகுதி ஒன்றிய நகர செயலாளர்கள் மற்றும் 386 வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜென்ட்கள் கலந்து கொண்டு திமுகவின் புதிய செல்போன் செயலி மூலம் கட்சியில் இணைக்கும் பணியை எப்படி செய்வது என்ற பயிற்சியை மேற் கொண்டனர்.
Next Story