கோவை வந்தார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் !

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் வந்தடைந்தார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். மத்திய அமைச்சர், நேற்றுஇரவு நேவல் ஆபீஸர் மெஸ் வளாகத்தில் தங்கினார். அவரது மனைவி சாவித்திரி சிங் (72) உடல்நலக்குறைவால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்வையிடவே அமைச்சர் கோவை வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் வருகையையொட்டி, கோயம்புத்தூர் நகரம் முழுவதும் காவல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
Next Story