சேலத்தில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

சேலத்தில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
X
கைப்பந்து சங்க தலைவர் வழங்கினார்
ரான்சன் கைப்பந்து கிளப், சேலம் மாவட்ட கையுந்து பந்து சங்கம், ஏ.டி.எம். குரூப்ஸ் ஆகியவை சார்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகாந்தி விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் முதல் பரிசை சேலம் ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி அணியும், 2-ம் பரிசை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி அணியும் பெற்றன. கல்லூரி அளவில் முதல் பரிசை ஈரோடு அணியும், 2-ம் பரிசை சேலம் சக்திகைலாஷ் கல்லூரி அணியும் பெற்றன. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு ரான்சன் கைப்பந்து கிளப் செயலாளர் ரான்சன் வரவேற்று பேசினார். சேலம் மாவட்ட கையுந்து பந்து சங்க செயலாளர்கள் மணிவண்ணன், தமிழரசன், சாமிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் மனோகரன் சிறப்புரையாற்றினார். தலைவர் எஸ்.பி.எஸ்.ஆனந்தன் கலந்து கொண்டு கல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். பள்ளி அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ஜினீயர் ஸ்ரீதாரணி, வனவர் அரவிந்த், ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பை வழங்கினர். விழாவில் ஏ.டி.எம். குரூப்ஸ் நிர்வாகிகள் முருகன், குமார், உடற்கல்வி ஆசிரியர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story