ராமநாதபுரம் புதிய எக்ஸ்ரே கருவி தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக எக்ஸ்ரே எடுக்கும் மிஷின் பழுதால் பொதுமக்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு லட்சம் மதிப்பிலான புதிய எக்ஸ்ரே மிஷினை வாங்கி கொடுத்தார். புதிய எக்ஸ்ரே மிசினை இன்று ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் மற்றும் திமுக நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



