வார விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X
படகு சவாரி செய்து உற்சாகம்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இந்நிலையில், வாரவிடுமுறை தினமான நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடோ பாயிண்ட், லேடீஸ் மற்றும் ஜென்ஸ் சீட், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொழுதை கழித்தனர். மேலும், அவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். ஏற்காட்டில் நேற்று காலை முதல் இதமான சீதோஷ்ணநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
Next Story