சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில்

சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில்
X
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன், பாரதி உரிமைகள் அறக்கட்டளை ஆகியவை சார்பில் முப்பெரும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. அமைப்பின் நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் முத்துக்குமரன், தொழில் அதிபர்கள் நாகராஜன், ராசி சரவணன், ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சண்முக சுந்தரம் கலந்து கொண்டு சேவை திட்டங்கள் குறித்து பேசினார். இதில், ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார். தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு கழக ஆலோசனைக்குழு உறுப்பினர் சரோஜா, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பேசினார்.
Next Story