சேலத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து

X
பா.ம.க.வில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். அதன்படி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக சரவணன், தலைவராக குமார், மாணவர் சங்க மாநில தலைவராக விஜயராசா, மாவட்ட அமைப்பு செயலாளராக ஆர்.கே.சிவா, துணை செயலாளர்கள் சங்கர், மாரியப்பன் உள்பட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி தலைமையில் புதிய நிர்வாகிகள் சேலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் தொங்கும் பூங்கா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, கட்சி தொண்டர்களிடையே புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிர்வாகிகளை மு.கார்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.
Next Story

