ராமநாதபுரம் ஜல்ஜீவன் திட்டம் குடிநீர் நிறுத்தம் மக்கள் அவதி

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்திற்கு குடிநீர் சுகாதாரம் மின்சாரம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அருந்ததியர் குடியிருப்பு பகுதி கிராம பொதுமக்கள் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் கடந்த ஆண்டு உடையநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மத்திய அரசு திட்டத்தின் ஜில் ஜீவன் திட்டத்தின் கீழ் இல்லந்தோறும் குடிநீர் வினியோகம் செய்திடும் வகையில் இல்லம் தோறும் ஒவ்வொரு குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது ஒரு சில தினங்கள் மட்டுமே இல்லந்தோறும் குடிநீர் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது இந்நிலையில் தற்போது குடிநீர் வினியோகம் முன் அறிவிப்பின்றி ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக குடியிருப்பு பகுதி பெண்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனியாரிடம் ரூபாய் ஒரு குடம் பத்திற்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையும் பணம் கொடுத்து குடிநீர் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கிராமத்திற்கு எப்போதாவது திடீரென சில நிமிடம் மட்டுமே விநியோகிக்கப்படும் சிறிதளவு குடிநீரை போட்டி போட்டு தள்ளு வண்டியில் குடங்களை அள்ளிச் சென்று முண்டியடித்துச் சென்று குடிநீரை சேகரிக்கும் பணியில் மும்முரமாக கிராம பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து கிராம பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் தங்கள் கிராமத்திற்கு விநியோகிக்கப்பட்டு வந்த ஜல்ஜீவன் திட்ட குடிநீர் வினியோகம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் வேறு வழி இன்றி தனியாரிடம் 10 ரூபாய்க்கு ஒரு குடம் குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் மற்ற எல்லா ஊர்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்வதாகவும் குறிப்பாக ஆளே இல்லாத ஊர்களுக்கு கூட நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையும் சில கிராமங்களில் ஆடு மாடு கறி மூட்டத்திற்கு குடிநீர் வினியோகம் பயன்படுத்தும் நிலையும் ஆனால் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடு தோறும் குடிநீர் குழாய் பைப் பெயரளவிற்கு இணைப்பு இருந்தும் பயனற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளி மூதாட்டி பெண் தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் தங்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாக முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

