ராமநாதபுரம் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் திருப்புல்லாணி ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது போட்டியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழகச் செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார் இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறக்கப்பட்டது ஒவ்வொரு காளைகளையும் 9 பேர் கொண்ட இளம் வீரர்கள் விரட்டி அடக்கியது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது பார்வையாளர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கைதட்டி விசில் அடித்து உற்சாகம் செய்தனர் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் முன்னாள் டிஆர்ஓ குணசேகரன் ராமநாதபுரம் நகர மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளர் பிடி ராஜா, ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு அமைப்பின் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் ரெகுநாதபுரம் காரான் ,கும்பரம். வெள்ளரி ஓடை தாமரைக் குளம் முத்துப்பேட்டை சக்திபுரம் வண்ணாகுண்டு திருப்புல்லாணி தாமரைக் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story



