மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி

மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி
X
அவதி
மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாகவே குறைவான மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.இதனால், வீடுகளில் உள்ள எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அண்ணாநகர் அருகிலேயே உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த மின்னழுத்தத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story