கோவை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய த.வெ.க. இளைஞரணி!

X
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு ஆட்டுக்குட்டிகள், மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வண்டி மற்றும் மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டது. இளைஞரணி அமைப்பாளர் சி.கே. அருண்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் செய்த உதவிகளை முன்னுதாரணமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் பேசிய அவர், தளபதி விஜய் விரைவில் பிரச்சாரப் பயணத்தை தொடங்க உள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணியில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.
Next Story

