தரகம்பட்டி டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது

தரகம்பட்டி டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது
தரகம்பட்டி டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி டாஸ்மாக் அருகே சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த அங்கமுத்து (44) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 4680 மில்லி லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story