பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருதமலை கோவிலில் சுவாமி தரிசனம் !
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கோவையின் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரின் மனைவி கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை பார்வையிட நேற்று கோவைக்கு வந்தார். மாலை 6.15 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர், முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமான் மற்றும் பஞ்சமுக விநாயகரை தரிசித்தார். பின்னர் மூலவர் சுப்பிரமணிய சாமி தரிசனமும் செய்தார். தரிசனத்தை தொடர்ந்து, மாலை 6.45 மணிக்கு அவர் கோவிலில் இருந்து புறப்பட்டார். அமைச்சர் வருகையையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
Next Story



