வேலூரில் கடையடைப்பு போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று ( ஜூன்.30) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மேலவளவில் நடைபெற உள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் மேலூர் நகரில் உள்ள கடைகளில் நேற்று (ஜூன்.29) மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்த 3 கடை ஊழியர்களை இவர்கள் தாக்கினர். இதனை கண்டித்து இன்று மேலூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் நகரில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்..
Next Story