முடிச்சூர் ஏரியில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

X
செங்கல்பட்டு மாவட்டம்,பெருங்களத்துாா் புத்தா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் ஹரிகரன் (14). அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தனது நண்பா்கள் 4 பேருடன் நேற்று சென்ற ஹரிகரன் முடிச்சூா் ஏரியில் குளித்தபோது, எதிா்பாராத விதமாக ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினாா். தகவலின்பேரில், பீா்க்கங்கரணை போலீஸாா், தீயணைப்பு வீரா்களுடன் விரைந்து சென்று நீரில் மூழ்கிய ஹரிகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Next Story

