பிரியாணி கடையில் பணத்தை அபகரித்துச் சென்ற இருவர் கைது

பிரியாணி கடையில் பணத்தை அபகரித்துச் சென்ற இருவர் கைது
X
பிரியாணி கடையில் பணத்தை அபகரித்துச் சென்ற இருவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மஸ்தான். இவா், காந்தி சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த இருவா் பிரியாணி பாா்சல் வாங்கியுள்ளனா். மஸ்தான் அதற்கான பணத்தைக் கேட்டபோது அவா்கள் பணத்தைத் தர மறுத்து, கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனா். இதுகுறித்து மஸ்தான் அளித்த புகாரின்பேரில், தாம்பரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்கானிப்பு கேமராக்களில் பதிவான வாகன எண்ணைக் கொண்டு விசாரித்தனா். புலிக்கொரடு பகுதியில் வாகன தணிக்கையின்போது அதே எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்தவா்களைப் பிடித்த போலீசாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கடப்பேரி பகுதியைச் சோ்ந்த சச்சின் (25) மற்றும் மதன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Next Story