சிந்தாமணியில் முதியோர் இல்லம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பொன்னம்மாள் தொண்டு நிறுவனம் சார்பில் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. முதியோர் இல்லத்தை தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி திறந்து வைத்தார். சகாதேவன் சுமதி தர்மராஜ் ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் புளியங்குடி நகர மன்ற துணைத் தலைவரும் நகர செயலாளருமான அந்தோணிசாமி, சித்ராஜ், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் செல்வம், தென்காசி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் மாரியப்பன், திருப்பதி, சிற்பண்ட் கணேசன், அட்சய பாத்திர அறக்கட்டளை நிறுவனர் ராமர், கண்ணன், சாம்பவர் வடகரை என் எஃப் எஸ் டிரஸ்ட் கோபி, புளியங்குடி ஏபிஜே கலாம் அமைப்பு அஜய், புதிய தமிழகம் சாமித்துரை நகர மன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
Next Story

