ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்!

X
புதுக்கோட்டை, நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த 4 மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்தனர். அப்போது மாணவர்களுக்கு ஆட்சியர் அருணா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

