அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

X
செய்யூர் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி எம் எல் ஏ பனையூர் மு.பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர் இந்த நிலையில் இந்த ஆண்டு செய்யூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் முழுமையாக தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்த மாணவ மாணவிகளை செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு இனிப்புகள் மற்றும் பேனா வழங்கி வரவேற்று மாணவ மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக விசிக நிர்வாகிகள் எம்.எஸ்.பாபு, மோகன்தாஸ், தமிழ்விரும்பி, எழில் இராவணன், ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் கல்லூரி முதல்வர் மாதவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

