சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுதாகி நிலையில் நீண்ட நாள் பிறகு சரி செய்யப்பட்டது

குடிநீர் இல்லாமல் தவித்த பொது மக்களுக்கு தற்போது குடிநீர் முறையாக வழங்கப்படுகிறது என பொதுமக்கள் நன்றி
செங்குணம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு நன்றி நன்றி நன்றி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் கிராம ஊராட்சி மூலமாக செங்குணம் அண்ணா நகரில் குடிநீர் கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகத்தில் 2020-ம் ஆண்டு ரூ.8 லட்சத்தில் புதியதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. மையத்தின் ஒரு கருவியில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி பாத்திரத்தில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வருவதில்லை. இதனால் ஏற்கனவே இம்மையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்திய பலரும் குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வந்தனர்.. தற்போது சுந்தரலிங்கம் பட குடிநீர் மைய இயந்திரங்களில் காணப்பட்ட பழுதுகளை சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
Next Story