குளத்துப்பாளையம்- மனைவி உயிரிழந்ததால் மனம் உடைந்து முதியவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை.
குளத்துப்பாளையம்- மனைவி உயிரிழந்ததால் மனம் உடைந்து முதியவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், வெங்கமேடு , புதுகுளத்து பாளையம் , திட்ட சாலை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி வயது 79. இவரது மனைவி கடந்த 4- மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த துரைசாமி மனவிரக்தியில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜூன் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் குளத்து பாளையத்தில் உள்ள மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இச்சம்பவம் அறிந்த துரைசாமியின் மகன் பாபு வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்துக்கு சென்றகாவல்துறையினர் , உயிரிழந்த துரைசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story




