பல்வேறு பாதுகாப்பு பின்பே பொதுமக்கள் அனுமதி

பல்வேறு பாதுகாப்பு பின்பே பொதுமக்கள் அனுமதி
X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் - குறை தீர்வு நாளை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு பின்பே பொதுமக்கள் அனுமதி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்தது. இன்று மாவட்ட குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருவார்கள் என்பதால் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பல்வேறு பாதை வழிகள் மூலம் பொது மக்கள் வர முடியும், தற்போது அனைத்து பாதைகள் அடைக்கப்பட்டு முதன்மை பாதை வழியாக மட்டுமே மக்கள் உள்ளே அனுமதி அளிக்கப்படுகின்றனர். மேலும் பலத்த சோதனைக்கு பின்பே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Next Story