கரூர்-சுவிட்ச்பெட்டியில் தொங்கிய வயரை தொட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

கரூர்-சுவிட்ச்பெட்டியில் தொங்கிய வயரை தொட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
கரூர்-சுவிட்ச்பெட்டியில் தொங்கிய வயரை தொட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சர்ச் கார்னர் மேற்கு பங்களா தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் ஆராஷ் வயது நான்கு. சிறுவன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடு கொண்டிருந்தான். அப்போது வீட்டில் ஒரு பகுதியில் ஸ்விட்ச் பெட்டியில் இருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்த ஒயரை சிறுவன் ஆராஷ் எதிர்பாராத நேரத்தில் தொட்டுவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் மயக்கம் அடைந்து மூர்ச்சையானான். உடனடியாக சிறுவனை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அறிந்த கரூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story