மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் இன்று(30.06.2025) நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3.00 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கணவர் இறந்த காரணத்தினால் குடும்ப அட்டை முடக்கப்பட்டியிருந்தது. முடக்கம் நீக்கம் செய்து ஒரு மணி நேரத்தில் குடும்ப அட்டை நகலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், ஊரக வளர்ச்சித்துறையில் இன்று பணி ஒய்வு பெறும் 4 பணியாளர்களுக்கும், சத்துணவு துறையில் இன்று பணி ஒய்வு பெறும் 7 பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து கேடையம் வழங்கி வாழ்த்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) சிவக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) செந்தில்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

