கோவை: கோமாரி நோய் தடுப்பூசி முகாம் !

கோவை: கோமாரி நோய் தடுப்பூசி முகாம் !
X
கோவை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் இந்த நோய், பசுக்களின் பால் உற்பத்தி, எருதுகளின் வேலை திறன் குறைவு மற்றும் இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமை, சுகாதாரமற்ற வளர்ப்பு முறைகள், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் ஆகியவைகளால் நோய் விரைவாக பரவக்கூடும். அதனால் யாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் போன்றவை மூலமாக மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. அதனால், கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் மாடுகள் மற்றும் இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story