ரோட்டரி சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை நிகழ்வு

ரோட்டரி சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை நிகழ்வு
திருச்செங்கோடு நகராட்சியில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ரோட்டரி கிளப் அல்மோ சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் இணைந்து திருச்செங்கோடு நகராட்சி 17 வது வார்டு சாணார்பாளையம் பகுதியில் ரோட்டரி திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் ரூ 85 லட்சம் மதிப்பீட்டில் நவீன எந்திரங்களை கொண்டு திடக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் அமைத்துக் கொடுத்தனர் இதன் துவக்க விழா இன்று நடந்தது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் இயந்திரத்தை துவக்கி வைத்தனர். இயந்திரங்களை துவக்கி வைத்துபேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறுவதைப் போல் எனது குப்பை எனது பொறுப்பு என்கிற அடிப்படையில் பொதுமக்கள் வீடுகளில் குப்பைகளைப் பிரித்துக் கொடுத்தால் தான் மேலாண்மை செய்ய முடியும் பொதுமக்கள் முழுமையாக இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.தினசரி பெருகிற குப்பைகள் தினசரி அளிக்கப்பட வேண்டும் ஏற்கனவே அனிமேரில் குப்பைகளை கொட்டி வைத்து அங்கு பல்வேறு பிரச்சனைகள் உருவானதை நாம் அறிவோம் இப்பொழுது தமிழக அரசு இடம் 5 கோடி நிதி பெற்று அதனை முழுமையாக அகற்றும் பணி நடந்து வருகிறது.திடக்கழிவு மேலாண்மைக்கு இந்த திட்டம் ஒரு ஆரம்ப புள்ளிதமிழகத்தில் எங்கும் அனுமதி இல்லாத நிலையில் பல்வேறுதொழில்நுட்ப சாத்திய கூறுகளை எடுத்துக் கூறி அனுமதி பெற்று இருக்கிறோம் என கூறினார்.நிகழ்ச்சியில் பேசிய திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது இதில் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சேகரமாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. தினசரி சராசரியாக 35 டன் குப்பைகள் சேகரமாகும் நிலையில் அதனை பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை எரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கென ரோட்டரி சங்கத்தின் உதவியை நகராட்சி நிர்வாகம் நாடிய நிலையில் ரூ 85 லட்சம் மதிப்பில் நான்கு கண்டங்களில் உள்ள ஐந்து நாடுகளை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்கள்இணைந்து ரூ 85 லட்சம் மதிப்பீட்டில் நவீன குப்பை எரிக்கும் எந்திரத்தை சாணார்பாளையம் பகுதியில் அமைக்க முடிவு செய்தனர். கடந்த 2021 இல் தொடங்கப்பட்ட இந்த பணி பல்வேறு நடைமுறை சிக்கல்களை எல்லாம் ஆய்வு செய்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திறப்பு விழா காணும் நிலைக்கு வந்துள்ளது. இதன் மூலம் தினசரி இரண்டு ஷிப்டுகளில் பத்து டன் குப்பைகளை எரிக்க முடியும்.இதன் மூலம் திருச்செங்கோடு நகராட்சியில் குப்பைகளை மேலாண்மை செய்வதில் உள்ள சிக்கல்கள்தீர்வுக்கு வரும்.ரோட்டரி சங்கம் திருச்செங்கோடு நகராட்சிக்கும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா தலைமை வகித்தார் திட்டத்தின் இயக்குனர் சண்முகசுந்தரம் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சிவக்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில்ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜான்சன் நிறுவனங்களின் தலைவர் நடராஜன், செங்குட்டுவன், வெங்கடேசன், அருள், பாபு, பாலாஜி, லோகநாதன், செங்கோட்டுவேலுபிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் செந்தில் நகர செயலாளர் குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.முதன் முதலாக குப்பை எரிக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்.
Next Story