சங்கரன்கோவில் அருகே இறந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்குபுரம் நான்காம் தெருவை சேர்ந்த விநாயகம் என்பது மனைவி லட்சுமி அம்மாள் (90)என்பவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு கிறிஸ்தவ முறைப்படி அவர் சார்ந்த சபை சார்பாக கல்லறைத் தோட்டத்து அமைப்பதற்காக பெரும்புத்தூரில் உள்ள பட்டா நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது இறுதிச் சடங்கு நிறைவேற்றப்பட்டது. லட்சுமி அம்பாளை புதைத்த நிலம் பெரும்புத்தூரில் உள்ள இடுகாடு அருகில் இருந்ததால் பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து லட்சுமி அம்பாள் உறவினரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. எங்கள் ஊரில் வந்து எங்களுக்கு தெரியாமல் எதையும் புதைத்து விட்டு செல்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று விடாப்பிடியாக நின்றனர்.. இதனால் அப்பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாமல் இறுதிச் சடங்கில் பதிவேற்றவர்கள் தவித்து நின்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சு வார்த்தை சுமூகமானதில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதன்பின்பு இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்றவர்கள் பத்திரமாக சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுடுகாட்டிலேயே மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்ஏற்பட்டது.
Next Story

