சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ...

வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்
உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிப்பதை தவிர்க்க வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் உள்ளூர் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என நீலகிரி இளைஞர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ... நீலகிரி மாவட்டத்தில் சுமார் 5,000 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 2000 வாகனங்கள் மட்டுமே உள்ளூர் பதிவு எண் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. மற்ற சுற்றுலா வாகனங்கள் வெளியூர் மாவட்ட பதிவு எண் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மேட்டுப்பாளையம், நாடுகாணி, மசினகுடி இது போன்ற இடங்களில் தானியங்கி மூலம் பசுமை வரி வசூலிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனம் அல்லாத நீலகிரியில் இயங்கும் மற்ற மாவட்ட பதிவு எண் எண் கொண்ட நீலகிரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் 30 ரூபாய் பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. எனவே நீலகிரி வாகனங்களுக்கு உள்ளூர் அனுமதி சீட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்பட வேண்டும் எனவும், அதேபோல் கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தற்காலிக பர்மிட்டுகள் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதாகவும் இதனை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்திற்கு தனியாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெளியூரிலிருந்து வந்து செல்வதால் அலுவலக வேலைகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், அதேபோல் வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கார் மற்றும் ஆட்டோக்கள் தங்கள் எல்லைகளை தாண்டி செல்வதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் இல்லாததால் நீலகிரிக்கு தனி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நியமிக்க வேண்டும் என நீலகிரி இளைஞர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பேட்டி: ராஜ் கண்ணன், நீலகிரி இளைஞர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க துணை தலைவர்
Next Story