நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் திமுக மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு போராட்டம்.

அடிப்படை பிரச்சனைகள் குறித்து விவாதம்
நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் திமுக மற்றும் மாற்று கவுன்சிலர்கள் வெளிநடப்பு போராட்டம். வார்டுகளில் நடைபெறும் பணிகளில் பாரபட்சம் காட்டுவதாக கூறி போராட்டம் நடத்தி வரும் கவுன்சிலர்கள் உடனடியாக நகராட்சி தலைவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லியாலம் நகராட்சியில் உள்ள 11 வார்டுகளுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என 11 கவுன்சிலர்களும் நகராட்சி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாதாந்திர கூட்டத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சிவகாமி என்பவர் உள்ளார் இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சியில் உள்ள நகர மன்ற தலைவர்களின் வார்டுகளில் எந்த அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை எனவும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் நகராட்சி மன்ற தலைவர் பாரபட்சத்தோடு வளர்ச்சி பணிகளை செய்து வருவதாகவும் உடனடியாக நகர மன்ற தலைவர் பதவி விலக வேண்டும் என தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த மாதாந்திர கூட்டத்தில் 11 கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லையாலம் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. பேட்டி - புவனேஸ்வரன் கவுன்சிலர்
Next Story