வணிகர் முன்னேற்ற சங்க இடைத் தேர்ர்தல்

X
குமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிகர் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜோஸ் பிரபு, பொதுச்செயலாயம் முபாரக் பொருளாளர் அசோகன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். மாநில துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர், ஆல்பட்ட்சிங் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் கடந்த ஜுன் 26-ம் தேதி நடந்தது. அன்றைய தினம் காலை 10 - மணி முதல் மாலை 5- மணி வரை தேர்தல் நடந்தது. தேர்தல் பார்வையாளர்களாக அரசு வழக்கறிஞர் றாபி, கல்லூரி பேராசிரியை ஷுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் வாக்கு எண்ணிக்கை இன்று மாலை வணிகர் சங்க அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் துணைத் தலைவராக நசீர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற நசீர் உறுதிமொழி எடுத்தார். வணிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

