உதகை மேற்கு நகர கழக அறிமுக கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது

X
உதகை மேற்கு நகர கழக அறிமுக கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது நீலகிரி மாவட்டம், உதகை மேற்கு நகர கழக அறிமுக கூட்டம், உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதகை மேற்கு நகர கழக பொறுப்பாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர அவை தலைவர் கோபி, துணை செயலாளர்கள் கிருஷ்ணன், ரீட்டா, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், வெங்கடேஷ், மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, காந்தல் ரவி, ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “ஓரணியில் தமிழ்நாடு” கழக உறுப்பினர் சேர்பு பணிகள் சிறப்புடன் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், உதகை மேற்கு நகர கழகத்திற்கு உட்பட்ட கிளை செயலாளர்கள், பிரதிநிதிதகள், நகரமன்ற உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர். முடிவில், மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில் நன்றி கூறினார்
Next Story

