கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது

கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
X
பளுகல்
குமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்தம்பாறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா பீடி போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜன் (48)என்பதும் தெரியவந்தது. இதை எடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story