கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? - அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

X
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை அறிவியல் வழியில் ஆய்வு செய்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம். கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்குப் பின்னராவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா? இவ்வாறு தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
Next Story

