தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்
X
தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள பஞ்ச சிவத்தலங்களுள் நீா் ஸ்தலமாக புகழ்பெற்ற கோயில் தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருகோயில் ஆகும். தலைவன்கோட்டை ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இத் திருக்கோயில் தோ் பழுதானதால், கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், வாசுதேவநல்லூா் தொழிலதிபரும், தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் நிறுவனருமான எஸ். தங்கப்பழம் நிதி உபயத்தில் இக்கோயிலின் புதிய தோ் வடிவமைக்கப்பட்டது. புதிய தோ் வடிவமைப்புப்பணி நிறைவடைந்த நிலையில், புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பரம்பரை அறங்காவலா் ராஜாராம் சேவுகப் பாண்டியன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனா்.
Next Story