சூளகிரி: தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவர் உயிரிழப்பு.

சூளகிரி: தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவர் உயிரிழப்பு.
X
சூளகிரி:தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள நல்லகானகொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணப்பா இவருடைய மகன் யஸ்வந்த் (16). இவர் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சேலையில் கட்டியிருந்த தொட்டிலில் உட்கார்ந்துக்கொண்டு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சேலை சிறுவனின் கழுத்தை இறுக்கியது. இதில் மயக்கம் அடைந்த சிறுவனை குடும்பத்தினர் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story