கோவை: பள்ளிக்குச் செல்லும் பழங்குடி மாணவர்களுக்கு பரிசல் படகு உதவி

கோவை: பள்ளிக்குச் செல்லும் பழங்குடி மாணவர்களுக்கு பரிசல் படகு உதவி
X
8 பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் வசதிக்காக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று பரிசல் படகு வழங்கப்பட்டது.
கோவை காரமடை அருகே உள்ள நெல்லித்துறை ஊராட்சியில், 8 பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் வசதிக்காக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று பரிசல் படகு வழங்கப்பட்டது. முன்னதாக 10 கிலோமீட்டர் சாலை வழியாக பயணிக்க வேண்டிய மாணவர்கள், தற்போது பவானி ஆற்றை கடந்து குறுகிய நேரத்தில் பள்ளிக்கு சென்று வர முடிகிறது. இந்த உதவியை த.வெ.க. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வழங்கியதோடு, பரிசலில் ஏறி பயணித்தும் காட்டினார். இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், நன்றி தெரிவிக்க மாணவ, பொதுமக்கள் முன்வந்தனர்.
Next Story