டாஸ்மாக் பாரில் அதிகாலை முதலே மது விற்பனை அமோகம் - வீடியோ வைரல் 

டாஸ்மாக் பாரில் அதிகாலை முதலே மது விற்பனை அமோகம் - வீடியோ வைரல் 
X
காங்கேயம் டாஸ்மாக் கடை பாரில் அதிகாலை முதலே மது விற்பனை அமோகம் - வீடியோ வைரல் 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டு மேலும் இன்று காலை மது விற்பனை செய்யப்படுவதும் அந்த கடையில் ஏராளமான கூட்டம் உள்ளத்தை வீடியோ எடுக்கப்பட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகள் 12 மேல் செயல்படுகின்றது. இதில் காங்கேயம் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டப்படுகிறது. அதன் பின்னர் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் அதிக விலைக்கு விற்பனை நடைபெறுவதும் இதை காவல் துறை மற்றும் மதுவிலக்கு காவல் துறையினர் புகார் கொடுத்தான் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே காங்கேயம் நால்ரோடு கடை எண் 3884 கடையின் பாரில் 100க்கு மேற்பட்டவர்கள் அதிக விலை கொடுத்து சர்வ சாதாரணமாக மது அருந்தும் வீடியோ காங்கேயம் பகுதியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story