கோவை: பேராசிரியையிடம் தாலிக்கொடி பறிப்பு - போலீசார் விசாரணை

X
கோவை சுந்தராபுரத்தில், தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பாத்திமா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர்கள் 7 பவுன் தங்கத் தாலிக்கொடியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமா பால் வாங்கி வீடு திரும்பும் போது சங்கிலி பிடுங்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. சுந்தராபுரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Next Story

