ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் இணைப்பு விழா நடைபெற்றது

ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் இணைப்பு விழா நடைபெற்றது
X
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம்- அதிமுகவில் இணையும் விழாவில் மாவட்ட செயலாளர் முனியசாமி பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் கங்கா மஹாலில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா வழக்கறிஞர் முத்து முருகன் முன்னிலையில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி முன்னிலையில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் இவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் இந்நிகழ்வில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரத்தினம் மாணவரணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், ராமநாதபுரம் மாவட்ட கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், இணைப்பு விழாவிற்கு பின்பு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி பேசுகையில் வரும் 2026 ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து பொதுமக்களின் வளர்ச்சியில் பங்கெடுப்போம் என பேசினார்
Next Story