அரை நிர்வாணமாக வந்து காவல் நிலையத்தில் அலப்பறை செய்த போதை ஆசாமி

அரை நிர்வாணமாக வந்து காவல் நிலையத்தில் அலப்பறை செய்த போதை ஆசாமி
X
பல்லடத்தில் அரை நிர்வாணமாக வந்து காவல் நிலையத்தில் அலப்பறை செய்த போதை ஆசாமி
கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவர் அதே பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் பகுதியில் வசித்து வரும் தனது அக்காவை பார்க்க பேருந்தில் பல்லடம் வந்துள்ளார். பல்லடம் பேருந்து நிலையம் வந்தவுடன் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று நிதானம் இழக்க வரை மது அருந்தியுள்ளார். பின்னர் அரை நிர்வாணமாக பல்லடம் காவல் நிலையம் வந்த போதை ஆசாமி கோகுல் என்னோட பணத்தை காணவில்லை எனவும் மீட்டு தாருங்கள் எனவும் அழுது தரையில் விழுந்து புரண்டு காவல் நிலையத்தில் அட்ராசிட்டி செய்தார். அவரை சமரசம் செய்த போலீசார் சட்டை அணிவித்து அவர்கள் குடும்பத்தினரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் ஒருவர் போதையில் காவல்நிலையத்தில் தரையில் புரண்டு அழுது அலப்பறை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story