பேரூராட்சி கவுன்சிலர்கள் அளித்து கோரிக்கை மனு

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் செயல் அலுவலர் செல்வகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் தனது வார்டு பகுதியில் கழிப்பறை வசதி இல்லை என்றும் இதனால் மகளிர் வைகை ஆற்று பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது வைகை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பேருந்து நிலையம் அருகே உள்ள மந்தைக்களம் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு செல்வதாக வருத்தம் தெரிவித்தார். அதனை சரி செய்யும் பொருட்டு சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி 13 வது வார்டு பகுதியில் மகளிர் கழிப்பறை உடனடியாக கட்ட வேண்டும். மேலும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தும், சின்டெக்ஸ் டேங்குகளை சரிவர பராமரிப்பு செய்யவும் வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்தார்.
Next Story

