கோவை: நிலத்தடி நீருக்கு வரி – விவசாயிகள் கண்டனம்!

கோவை: நிலத்தடி நீருக்கு வரி – விவசாயிகள் கண்டனம்!
X
மத்திய நீர்ப்பாசன துறை அமைச்சகம் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்ததை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு.
மத்திய நீர்ப்பாசன துறை அமைச்சகம் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்ததை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தது. இது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகவும், நீர் சேமிப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் விவசாயிகளை குறிவைக்கும் நடவடிக்கையாகவும் உள்ளது எனக் குற்றம்சாட்டினர். மத்திய அரசு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகத்தில் அமல்படுத்தப் போவதில்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
Next Story