கோவை: விவசாய நிலங்களில் தொடரும் மின் சாதன திருட்டு !

X
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத் தோட்டங்களில் மோட்டார் வயர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருடபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவல் ஆய்வாளர் சண்முகவேலுவிடம் புகார் மனுவை வழங்கி, உடனடி நடவடிக்கை கோரினர். போலீசார் மற்றும் விவசாயிகள் இணைந்து வாட்சப் குழு அமைத்து, இன்று முதல் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் முயற்சியாக விவசாயிகள் தகவல்களை பகிர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

