கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
X
மேற்கு தமிழகத்தின் முக்கிய கல்வி நிறுவமான கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில், இந்த ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
மேற்கு தமிழகத்தின் முக்கிய கல்வி நிறுவமான கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில், இந்த ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. சுமார் 35,000 விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,800 மாணவர்களுக்கு, தங்கள் துறைகளை நடத்தும் பேராசிரியர்கள் ரோஜா மலர்களுடன் அன்புடன் வரவேற்பு வழங்கினர். 1852-ல் தொடங்கி, 1870-ல் முதன்மை கல்லூரியாக உயர்ந்த இந்த கல்வி நிறுவனம், மேற்கு தமிழகம், கிழக்கு கேரளம் மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளுக்கு "Oxford" என அறியப்படும் மதிப்புமிக்க கல்வி மையமாக விளங்குகிறது. இங்கு படித்தோர் பலர் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என உயர்ந்த பதவிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story