அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாற்றம்!

X
அரக்கோணம் வருவாய் கோட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி தாலுகாக்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி பொது கலந்தாய்வு நடைபெற்றது. அதன்படி அரக்கோணம் தாலுகாவில் 19 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், நெமிலி தாலுகாவில் 27 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த கிராமங்களில் உடனே பொறுப்பேற்க அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

